ஆடி கடைசி வெள்ளி; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2023 06:08
திருப்புவனம்: மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிகிழமை உச்சி கால பூஜையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம், இன்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. திருப்புவனம் போலீசார் மடப்புரம் விலக்கிலேயே ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசலின்றி பக்தர்கள் சென்று வந்தனர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி , மாற்றுதிறனாளி பக்தர்களுக்கு தனி வரிசை உள்ளிட்டவைகள் செய்யப்பட்டிருந்தன. உச்சி கால பூஜையின் போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.