Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ... மருதமலையில் அமைகிறது பிரமாண்டமான முருகன் சிலை; அமைச்சர் ஆய்வு மருதமலையில் அமைகிறது பிரமாண்டமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல நூறு ஆண்டுக்கு முன் ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அருள்பாலித்த அழகு நாச்சியம்மன்
எழுத்தின் அளவு:
பல நூறு ஆண்டுக்கு முன் ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அருள்பாலித்த அழகு நாச்சியம்மன்

பதிவு செய்த நாள்

12 ஆக
2023
11:08

பல்லடம்: கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, வதம்பச்சேரி நல்லூர்பாளையம் கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அழகுநாச்சி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆடி முதல் மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில், ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தியபடி, அழகு நாச்சியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது இக்கோவிலில் தொன்று தொட்டு நடந்து வருகிறது.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: பல நூறு ஆண்டுக்கு முன், ஆங்கிலேயர் படை, நல்லூர் பாளையம் கிராமம் வழியாக சென்றது. படையில் இருந்த சில வீரர்கள், இங்கிருந்து பெண்கள் பலரிடம் தவறாக நடக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பித்த பெண்கள், அழகு நாச்சி அம்மன் கோவிலில் தஞ்சமடைந்தனர். பெண்களை விரட்டியபடி கோவிலுக்குள் வந்த படைவீரர்களுக்கு கண்பார்வை கோளாறு ஏற்பட்டது. தவறை உணர்ந்த அவர்களிடம், அம்மனை வேண்டிக் கொண்டால் நிச்சயம் சரியாகும் என கிராம மக்கள் கூறியதை தொடர்ந்து, அவர்களுக்கு கண் பார்வை சரியானது. கோவிலுக்குள் பெண்கள் தஞ்சம் அடைந்ததன் காரணமாக, இங்குள்ள அம்மனுக்கு அடைக்கல அம்மன் என்ற பெயரும் உள்ளது. கண்பார்வை திரும்ப கிடைத்ததன் காரணமாக, ஆங்கிலேயர்கள், அழகு நாச்சியம்மனுக்கு பட்டு, கதர் சேலைகள் வழங்கி அம்மனை வழிபட்டு சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் நடந்தது ஆடி மாதம் என்பதால், ஆண்டுதோறும் முதல் மற்றும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தி, அழகு நாச்சியம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம் என்றனர். முன்னதாக, ஆங்கிலேயர் வழங்கிய புடவையுடன், சிறப்பு அலங்காரத்தில் அழகு நாச்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar