பராமரிப்பின்றி அழியும் நிலையில் ஈஸ்வரன் கோயில்; விளக்கு பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2023 10:08
கூடலுார்: கூடலுார் தாமரைக்குளத்தில் உள்ள 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயிலில் 1008 அகல் விளக்கு பூஜை நடந்தது.
கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் பழமையான 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில் தொடர்ந்து பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ளது. இருந்தபோதிலும் பக்தர்கள் வாரம்தோறும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதோஷ விழாவை முன்னிட்டு மக்கள் நலமுடன் வாழவும், மழை வேண்டியும் 1008 அகல் விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக 2 ஆயிரம் பக்தர்களுக்கு ஹிந்து முன்னணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருமுறை பாராயணம் நிகழ்ச்சி நடந்தது. தேனி வேதபுரி ஆசிரமம் சுவாமி பூர்ணானந்தா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். கூட்டு பிரார்த்தனை நடந்தது. கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட ருத்ராட்சம் வழங்கப்பட்டது. அகல் விளக்கு பூஜையில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஈஸ்வரன் கோயில் வார வழிபாட்டு குழு செய்திருந்தது.