பதிவு செய்த நாள்
14
ஆக
2023
11:08
குன்றத்துார்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தெற்கு, திருநீர்மலை சாலையில், பக்தர்களிடம் பிரசத்தி பெற்ற சக்தி கோவில், தேவி மந்தைவெளி அம்மன், கங்கை அம்மன், காத்யாயினி அம்மன் கோவில் உள்ளது.
திருமணமாகாத பெண்களுக்கான பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 4ம் வாரம், ஆடி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, 39ம் ஆண்டு ஆடி திருவிழா வைபவம், இம்மாதம் 9ல், பந்தக்காலுடன் துவங்கியது. 11ல் அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், திருமஞ்சன நீராட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று, காலையில் விநாயகர் வழிபாடு, மலர் அலங்காரம், பம்பை உடுக்கையுடன் அம்மனை வர்ணித்து பாடுதல் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல், 1:30 மணிக்கு முக்கிய வீதிகளில் திருக்குட ஊர்வலம், மாலை 6:00 மணிக்கு தீ மிதித் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து, தீ மிதித்து, தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். இன்று மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு விளையாட்டுதல் விழா மற்றும் மங்கள ஆரத்தியுடன், ஆடி விழா நிறைவடைகிறது.