பதிவு செய்த நாள்
14
ஆக
2023
12:08
வாரணாசி ஸ்ரீ சங்கர மடத்தில், செப்., 21 முதல் 28 வரை, அதிருத்ரம் மற்றும் சகஸ்ர சண்டியாகம் நடைபெற உள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமிகள் ஸ்ரீமடம் சன்னிதானம், வாரணாசியில் உள்ளது. பீடாதி பதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வாரணாசி ஸ்ரீசங்கர மடத்தில், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகிறார். 21 வழிபாட்டின் முக்கிய நிகழ்வாக, அதிருத்ரம் சகஸ்ர சண்டியாகம், செப்., 21 முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. யாகபூஜைகள், ஒரு லட்சம் மோதகங்கள் சமர்ப்பித்து, விநாயகர் வழிபாட்டுடன் துவங்கும். மொத்தம், 121 வேத விற்பனர்கள், தினமும் 11 முறை, ரிக் வேதத்தில் உள்ள அதிருத்ர மந்திரத்தை ஜெபித்து, தொடர்ச்சியாக, 11 நாட்களுக்கு வழிபாடு நடத்துகின்றனர். சிவபெருமானை மகிழ்விக்கும் வகையில், அதிருத்ர யாக வழிபாடும். துர்க்கை, சரஸ்வதி, மகா லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியரை வணங்கும், சகஸ்ர சண்டி யாகமும் நடக்க உள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் வாரணாசி ஸ்ரீ காஞ்சி காம கோடி பீடம் சென்று, சுவாமிகளை தரிசனம் செய்து, அதிருத்ரம் மற்றும் சகஸ்ர சண்டி யாகத்தில் பங்கேற்கஉள்ளனர்.