கெங்கையம்மன் கோவிலில் ஆடி பெருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2023 03:08
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கெங்கை அம்மன் கோவில் ஆடி பெருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருக்கோவிலூர், மேல வீதியில் உள்ள பழமையான கெங்கை அம்மன் கோவிலில் ஆடி மாத பெருவிழா கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. அன்று வேண்டுதல் உள்ள பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றில் காப்பு கட்டிக் கொண்டு, கெங்கையம்மன், மாரியம்மன், பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் ஆவாகனம் செய்து, சக்தி கரகமாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து தினசரி மாலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை அம்மன் வீதி உலா நடந்தது. இன்று பகல் 10:00 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் வேண்டுதல் உள்ள பக்தர்கள் அலகு குத்தி, தேர் இழுத்து, அக்னி சட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு கூழ் வார்த்தலும், இரவு கும்பம் கூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.