சுதந்திர தின விழா; சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2023 03:08
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் கீழவீதி கோபுரத்தில் சுதந்திர தின விழாவையொட்டி பொது தீட்சிதர்கள் தேசிய கொடி ஏற்றினர்.
உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம், இந்தியா சுதந்திரம் பெற்றும் 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 77-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில், கீழ்வீதி கோபுரத்தில் தேசிய கொடியை பொது தீட்சிதர்கள் ஏற்றினர். முன்னதாக, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானிடம், வெள்ளி தாம்பாலத்தில் வைத்து, தேசியக் கொடி பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்த பொது தீட்சிதர்கள் செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில், பொதுதீட்சிதர்கள் மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் ஊர்வலமாக வலம் வந்து, பிரதான வாயிலான கிழக்கு கோபுரத்தின் உச்சிக்கு சென்று தேசியக்கொடியை ஏற்றினர். பின்னர், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.