சூலூர்: பெரிய குயிலி ஸ்ரீ கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவிலில் மண்டல பூஜை நடந்தது.
சூலூர் அடுத்த பெரிய குயிலி கிராமத்தில், கீதா பஜன் அறக்கட்டளை சார்பில், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த ஜூன் 29ம்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நடந்த மண்டல பூஜையில் அனுமனுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. கீதா பஜன் குழுவினரின் பஜனை நடந்தது. 48 நாள் மண்டல பூஜை நிறைவு விழாவை ஒட்டி இன்று மூல மந்திர ஹோமம் மற்றும்108 சங்காபிஷேகம் நடந்தது. 12 மணி நேரம் தொடர்ந்து ராம நாம பஜனை நடந்தது. அனுமனுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. வள்ளி கும்மி ஆட்டம் மற்றும் பக்தி சொற்பொழிவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.