தெற்குசத்திரம் கோயிலில் பூக்குழி திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2012 10:10
சிவகிரி: தெற்குச்சத்திரம் பத்ரகாளீஸ்வரி கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது. சிவகிரி அருகே தெற்குசத்திரம் பத்ரகாளீருவரி கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு பூஜைகளும், சப்பரப்பவனியும் நடந்தது. பூக்குழி திருவிழாவான நேற்று காலை 5 மணிக்கு அம்மனுக்கு கோவில் முன் உள்ள பூக்குழித் திடலில் அக்னி வளர்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு கோயில் முன் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருக்காட்சி கொடுத்தார். பின்பு பூ இறங்கும் பக்தர்கள் சப்பரத்தின் பின்பு வரிசையாக திருவீதிசென்றனர். நகரின் முக்கிய வழியாகச்சென்று பூக்குழித்திடலை சப்பரம் அடைந்தவுடன் பக்தர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் அக்னிச்சட்டியுடன் 50க்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர். இரவு 7மணிக்கு அம்மன் அழைப்பு நடந்தது. நாடார் உறவின்முறை தலைவர் மாரியப்பன், செயலாளர் பெரியதுரை, பொருளாளர் வைரவன், உறுப்பினர்கள் பத்திரகாளி, காளிமுத்து, காளிமுத்து ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். புகழிராஜ, காளிமுத்து, காளியப்பன், மாரிமுத்து மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.