பதிவு செய்த நாள்
10
அக்
2012
10:10
ப.வேலூர்: நன்செய் இடையாறு, பொன்காளியம்மன் கோவிலில் இருந்த, பித்தளை பாத்திரங்கள், வெள்ளி ஆபரணம் ஆகியவை திருட்டு போனது.ப.வேலூர் அடுத்த நன்செய் இடையாறில், பொன்காளியம்மன் மற்றும் ஆச்சியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில், கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பூஜை பொருட்களான பித்தளை பாத்திரங்கள், ஸ்வாமியின் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி ஆபரணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மேலும், கோவில் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கைகளை திருட முயன்றுள்ளனர். உண்டியலை உடைக்க முடியாததால், அப்படியே விட்டுச் சென்றனர். நேற்று காலை, 8 மணிக்கு கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவில் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து ப.வேலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.