Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரண்டே மாத கோர்ஸ்! எளிமையாக வாழ்ந்தால் எள்ளளவும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எதிலும் கலை உணர்வு வேண்டும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2012
12:10

எதையும் கலையுணர்வுடன் காண்பவர்கள் அவரவர் துறையில் வெற்றி பெறுகிறார்கள். சந்திரகுப்தரின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் சாணக்கியர். அப்போது, நந்தர் என்னும் பிரிவினர் பாடலிபுத்திரத்தை ஆட்சி செய்தனர். அவர்களைத் தோற்கடித்து சந்திரகுப்தனை ஆட்சியில் அமர்த்த சாணக்கியர் திட்டம் வகுத்தார். சந்திரகுப்தனும் அவரது பேச்சை நம்பி, நந்தர்கள் மீது போர் தொடுத்தான். பாடலி புத்திரத்துக்குள் அவனது படை நுழைந்தது. ஆனால், வலிமை மிக்க நந்தர்கள், சந்திரகுப்தனின் படையைத் தவிடு பொடியாக்கி விட்டனர். இ ருந்தாலும், சாணக்கியர் முயற்சியைக் கைவிட வில்லை. அவர் நுண்ணறிவு படைத்தவர். நந்தர்களை தோற்கடிக்க எத்தனையோ வழிமுறை களை ஆராய்ந்து பார்த்தார். எதுவும் சரியெனப் படவில்லை. ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் இருந்து ஒரு தாயும், மகனும் பேசுவது கேட்டது. மகன்: அம்மா! இப்படி தோசை சுட்டால் எப்படி? தோசையின் நடுவே மிளகாய்ப் பொடியை உப்பலாகப் போட்டிருக்கிறாயே! ஓரத்தில் பொடியே இல்லை! ஓரத்தைப் பிய்த்து சாப்பிட்டால் காரமே இல்லை. நடுவில் உள்ளதை எடுத்தால் உறைப்பு தாங்கவில்லை. என்னம்மா! தோசை சுடுறே! தாய்: டேய் முட்டாளே! ஓரத்தில் உள்ளதைப் பிய்த்துநடுவில் உள்ள பொடியைத் தொட்டு சாப்பிடு. அங்கே பொடி குறைந்து விடும். பிறகு நடுவில்உள்ளதைச் சாப்பிடு. காரம்சரியாக இருக்கும். இதுகூட தெரியாதா உனக்கு! சாணக்கியர் துள்ளி எழுந்தார். அந்த வீட்டுக்குள் சென்றார். அம்மா! மூடிக்கிடந்த என் கண்ணைத் திறந்து விட்டீர்கள். என் சிக்கலுக்கு வழிசொன்ன தெய்வத்தாய் நீங்கள்! சாணக்கியர் சொன்னது அந்த பெண்ணுக்குப் புரியவில்லை. சந்திரகுப்தரிடம் வந்தார் சாணக்கியர். சந்திரகுப்தா! முதலில் பாடலிபுத்திரத்தை சுற்றியுள்ள பகுதிகளை நம் வசமாக்கு. பிறகு, நகருக்குள் நுழைவது எளிதாக இருக்கும்,. இந்த யோசனை சந்திர குப்தனுக்கும் பிடித்து விட்டது. ஒவ்வொரு ஊராக அவன் கைப்பற்றினான். பின், பாடலிபுத்திரத்திற்குள் எளிதில் புகுந்து அதையும் வெற்றி கொண்டான். பார்த்தீர்களா! ஒரு தோசையை கலையுணர்வுடன் கண்டதன் விளைவு, ஒரு தேசத்தின் வெற்றியையே நிர்ணயித்ததை!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar