Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எதிலும் கலை உணர்வு வேண்டும் நான் என்னும் நரகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எளிமையாக வாழ்ந்தால் எள்ளளவும் கவலையில்லை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2012
12:10

பார்வதிக்கு ஒரு சந்தேகம். பரமேஸ்வரனிடம் கேட்டாள். அன்பரே! பொருள் பெரிதா? அதன் சக்தி பெரிதா? என்று! அப்போது சிவனை வணங்க ஜைதீவஷ்ய முனிவர் வந்தார். அவர் காதில் அம்பாள் கேட்ட கேள்வி விழுந்தது. இதிலென்ன சந்தேகம்! சக்தி என்பது பொருளுக்குள் புதைந்திருக்கும் ஒரு அம்சம். பொருள் என்ற ஒன்று இருந்தால் தானே சக்தி என்ற ஒன்று அதனுள் புதைந்திருக்க முடியும்! எனவே பொருள் தான் பெரிது, என்றார். பார்வதிக்கு கோபம் வந்து விட்டது. நீர் யார்? என் கணவரிடம் நான் கேள்வி கேட்டால், நீர் முந்திக்கொண்டுபதிலளிக்கிறீரே! அவ்வளவு தைரியமா உமக்கு! ஜைதீவஷ்யர் பதிலேதும் சொல்லவில்லை, அங்கிருந்து போய்விட்டார். சிவனிடம், பார்த்தீர்களா உங்கள் பக்தரை! நான் கேட்டும் ஏதும் சொல்லாமல் கிளம்பி விட்டதை! யார் அவர்? என்றாள். அவர் பரமசாது. பெயர் ஜைதீவஷ்யர். ஆசை என்பது அவரிடம் எள்ளளவும் கிடையாது. ஆசை இல்லாத ஒருவன் பூமியில் இருக்கிறானா என்ன! வாருங்கள், அவரைச் சோதித்து அறியலாம், என்று பார்வதி சொல்லவும், சிவனும் கிளம்பி விட்டார். அவர் தங்கியிருந்த குடிலை அவர்கள் அடைந்தனர். ஆங்காங்கே கிடைத்த கிழிந்த துணிகளை தைத்து தனக்கு ஆடையாக்கிக் கொண்டிருந்த முனிவர், சிவபார்வதி தன்னைத் தேடி வந்ததும் ஆச்சரியம் கொண்டார். உங்களுக்கு என்ன வேண்டும்? என்றார் சிவன். ஏதும் தேவையில்லை! எல்லாம் தான் தந்திருக்கிறீர்களே! ஓலைக்குடிசை. உடலை மறைக்கும் அளவுக்கு உடை! தேவைக்கு உணவு! போதுமே! என்றார். சிவன் அவரை பலமுறை வற்புறுத்தியும், எனக்கு எந்தக்குறையும் இல்லை, என மறுத்துவிட்டார் முனிவர். பார்வதிதேவி அவரை வாழ்த்தினாள். ஜைதீவஷ்யர் போல் வாழ்வது இக்காலத்தில் சாத்தியமல்ல! ஆனால், இவரது வாழ்க்கை மூலம், தேவைகளைக் குறைக்க குறைக்க, இன்றைய விலை உயர்வுபற்றி கவலையில்லாமல் இருக்கலாம் அல்லவா! 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar