ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புது பள்ளியறை பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2023 11:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புது பள்ளியறையில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளியதும் பூஜை நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் ஆடி திருக்கல்யாணம் விழா ஜூலை 13ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 14 நாட்கள் நடந்து முடிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு புது பள்ளியறை பூஜை நடந்தது. அம்மன் சன்னதி அருகில் உள்ள பள்ளியறை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி, அம்மன் எழுந்தருளியதும் கோயில் குருக்கள் மகா தீபாராதனை, புது பள்ளியறை பூஜை நடத்தினார். அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.