ரேணுகா தேவி அம்மன் கோவிலில் புஷ்பபல்லாக்கு நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஆக 2023 05:08
காரைக்கால்: காரைக்காகால் பட்டினச்சேரி ஸ்ரீரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் பவித்ரோத்ஸவ விழாவை முன்னிட்டு புஷ்ப பல்லக்கு விதியுலா நடைபெற்றது.
காரைக்கால் திருப்பட்டினம் அடுத்த பட்டினச்சேரி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீரேணுகாதேவி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு ஆணி மாதத்தில் நடைபெறும் பவித்ரோத்ஸவ விழா மிகவும் விமர்ச்சியாக நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 24ம் தேதி பால் காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று புஷ்ப பல்லக்கு வீதியுலாவில் காளி ஆட்டம். சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பின்னர் வானவேடிக்கை நடைபெற்றது.இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.