பழநி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம்; காத்திருந்து சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஆக 2023 11:08
பழநி: பழநி முருகன் கோவிலுக்கு ஞாயிறு விடுமுறை நாளன்று பக்தர்கள் கூட்டம் இருந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்கோயில் செல்ல, வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். காலையில் சில மணி நேரங்கள் சர்வர் பழுது ஏற்பட்டதால் டிக்கெட் வழங்க இயலாமல் பணியாளர்கள் சிரமம் அடைந்தனர். ரோப்கார் சேவை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே ரோப் கார் செயல்படவில்லை. பழநி மலை அடிவாரம், கிரிவீதி சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு அதிகளவில் இருந்தது. திருஆவினன்குடி கோயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. அடிவாரம் முக்கிய வீதிகளில் வாகனங்களை நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.