செம்பை சங்கீத உற்சவம் பாலக்காட்டில் 9ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2023 03:09
பாலக்காடு: செம்பை வைத்தியநாத பாகவதரின் 127வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பாலக்காட்டில் இரு நாள் சங்கீத உற்சவம் 9ம் தேதி துவங்குகிறது.
பாலக்காடு செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில் 9ம் தேதி மாலை 3.30 மணிக்கு மஞ்சேரி சுவாதி திருநாள் குருகுல மாணவர்களின் சங்கீத ஆராதனை துவங்கும். 5.30 மணிக்கு குருவாயூர் தேவஸ்தான நிர்வாகி வினயன் விழாவை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து 6.30 மணிக்கு ஸ்ரீவத்சன் ஜே., மேனோன் குழுவின் கச்சேரி நடைபெறும். 10ம் தேதி காலை 8.30 மணிக்கு செம்பை வித்யா பீடம் ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து சங்கீத ஆராதனை நடத்துகின்றன. 11.30 மணிக்கு செம்பை வித்யா பீடத்தின் 38வது ஆண்டு மாநாட்டை, ஸ்ரீராமன் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து 12.30 மணிக்கு மண்ணூர் ராஜகுமாரனுண்ணி குழுவினரின் கச்சேரி நடக்கிறது. இந்த இருநாள் சங்கீத ஆராதனையில் 150க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை செம்பை வித்யா பீடம் தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் முருகன் செய்துள்ளனர்.