புதுடில்லி: கிருஷ்ணர் பிறந்த நாளான ஜென்மாஷ்டமி, வட மாநிலங்களில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தெற்கு டில்லி, கிழக்கு கைலாஷ் பகுதியில் அமைந்துள்ள இஸ்கான் கோவிலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தார். இதுகுறித்து, சமூகவலை தளத்தில் அமித்ஷா, “ஜென்மாஷ்டமி பண்டிகை, இதயத்தில் மகிழ்ச்சியையும், பக்தியையும் நிரப்புகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எல்லாருக்கும் அருள்புரியட்டும்,” என, கூறியுள்ளார். கிருஷ்ணர் பிறந்த நாளான ஜென்மாஷ்டமி, வட மாநிலங்களில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.