சனாதனம் என்றால் என்ன..! பிளஸ் 2 பாட புத்தகத்தில் விளக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2023 11:09
சென்னை, சனாதனம் என்றால் என்ன என்று, தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக அரசின் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 அறவியலும், இந்திய பண்பாடும் என்ற பாட புத்தகத்தின் 58வது பக்கத்தில் இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம் +து எனப்பிரிக்கலாம். ஹிம் ஹிம்சையில், து துக்கிப்பவன் எனப் பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்தினால், அந்த துயரத்தை தனக்கு ஏற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அந்த பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும். இந்து சமயம், சனாதன தர்மம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தர்மம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் வேதசமயம் என்றும் வேதநெறிகளையும், சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்து சமயத்தின் அடிப்படை கோட்பாடு கடவுளை அடைவதாகும். எல்லாவற்றையும் விட இவர் மேலானவராக இருப்பதால் கடவுளை பரம்பொருள் என்று இந்து சமயம் கூறுகிறது. இவ்வாறு அந்த பாடத்தில் சனாதன தர்மம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.