பதிவு செய்த நாள்
14
செப்
2023
04:09
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி கிராமத்தில் கிருஷ்ணர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது.இதனைமுன்னிட்டு யாகசாலை பூஜை தொடங்கி மங்கள வாத்தியம், கோ பூஜை, அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, தேவதானகை, சங்கல்பம், சமகம், பஞ்ச சுக்தங்கள், மூல மந்திரம், ருத்ர ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், மஹா பூர்ணாஹீதி, தீபாரதனை நடந்தது. பாமா ருக்மணி கிருஷ்ணருக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்பு விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.