அலங்காநல்லூர்: மதுரை காஞ்சரம் பேட்டை பாறைப்பட்டி பேசும் கன்னிமார் கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ஏழு கன்னிமார் அம்மனுக்கும் பல்வகை மலர்களால் அர்ச்சனை, தீபாரதனை செய்து வழிபட்டனர். முன்னதாக கிராம சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோயில் உலக நன்மை வேண்டி பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.