நான்குநேரி பெருமாள் கோயிலில் ஒருகோட்டை எண்ணெய் காப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2023 12:09
நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நடந்தது.
நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதும் ஆகும். இங்கு நித்திய எண்ணெய் காப்பு நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நடந்தது. இதில் காலையில் விஸ்வரூப தரிசனம் தொடர்ந்து வானமாமலை பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நடந்தது. பின்னர் வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்கார பூஜையை தொடர்ந்து தீர்த்த, ஜடாரி, பிர சாத வினியோகம் வழங்கப்பட்டது. இதில் வான மாமலை மடத்தின் 31 வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு வானமாமலை பெருமாளுக்கு சந்தன காப்பு அலங்காரமும், தொடர்ந்து வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயார், ஆண்டாள் சப்பரத்தில் எழுந்தருளிய பின் சப்பரம் புறப்பட்டு உள்மாடவீதி சுற்றி கோயிலை வந்தடைந்தது.