தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு ஐந்து கால பூஜை நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர். முகம் சுழிப்பு: கோயில் வெளிப்பிரகாரத்தில் மழை நீர் வெளியே வழி இல்லாததால், ராஜ கோபுரம் அருகே தேங்கி நின்றது. இரண்டு பூஜைகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளியின் போது, வரிசையில் காத்திருந்த பக்தர்கள் வேறு வழியின்றி மழை நீர் அருகிலேயே அமரும் சூழல் ஏற்பட்டது. பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.கோயில் பிரகாரத்தில் மழை நீர் தேங்காமல் வெளியேற கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.