பதிவு செய்த நாள்
13
அக்
2012
10:10
தளவாய்புரம்: சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில், சுற்று கிராம மக்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்தனர். சொக்கநாதன்புத்தூர் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் புரட்டாசி தேர் விழா, கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.அம்மன், தினமும் பல்வேறு வாகனங்களிள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவில் கலை நிகழ்ச்சி ,பட்டி மன்றம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று காலை 10மணிக்கு துவங்கியது. ஏ.கே.ஆர் குரூப் டைரக்டர் காமராஜ் வடம் பிடித்துதுவக்கி வைத்தார். தேர், நான்கு வீதிகள் வழியாக வந்து , நிலைக்கு வந்தது. சுற்று கிராம மக்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் பின், ஆயிரக்கணக்கான பெண்கள் ,சிறுவர்கள் அங்கப்பிரதட்ணம் செய்து,நேர்த்தி கடன் செலுத்தி,அம்மனை வழிப்பட்டனர்.மாலையில் பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடை உறவின்முறை நாட்டாமைகள் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.