திருக்கோவிலூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளையில் உள்ள இரட்டை விநாயகர் மற்றும் என்.ஜி.ஜி.ஓ., நகர் சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளையில் உள்ள ஜெய கணபதி, விஜய கணபதி இணைந்த இரட்டை விநாயகர் கோவிலில் காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் ஷோடசோபவுபச்சார தீபாரதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் லட்சார்ச்சனை, இரவு 9:00 மணிக்கு உற்சவருக்கு மூஷிக வாகனத்தில் தீபாராதனை நடந்தது. என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்தி வினாயகர் ஆலயத்தில் காலை 9:00 மணிக்கு மூலவர் விநாயகருக்கு மகா அபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், தீபாராதனை நடந்தது. சந்தனகாப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை, அர்ச்சனை, மேலக்கச்சேரி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.