சிறுவர்கள் வைத்த சிறிய விநாயகர் சிலை; அனுமதி பெற வில்லை என அப்புறப்படுத்திய போலீசார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2023 03:09
அனுப்பர்பாளையம்: விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, திருப்பூர், அடுத்த அனுப்பர்பாளையம் முத்து கோபால் நகரை சேர்ந்த சிறுவர்கள் ஒன்றிணைந்து, வீதியில் சிறிய அளவிலான விநாயகர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். சிறுவர்கள் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதிற்காக போலீசாரிடம் முறையான அனுமதி பெறவில்லை. இந்நிலையில், அனுமதி பெறாமல் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துள்ளது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையொட்டி, சம்பவ இடத்துக்கு சென்ற அனுப்பர்பாளையம் போலீசார் அனுமதி இன்றி விநாயகர் சிலை வைக்ககூடாது. அப்புறப்படுத்துமாறு வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து, சிறுவர்கள் சிலையை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.