மானாமதுரை: மானாமதுரை அரசு மருத்துவமனை எதிர்புறம் தென்றல் நகரில் உள்ள ராஜகணபதி கோவிலில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலில் புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து யாகம் நடத்தப்பட்டு, பூர்ணாகுதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து அர்ச்சகர் ஐயப்பன் தலைமையில் 108 சங்காபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் நடைபெற்றது.வருஷாபிஷேக விழாவில் தென்றல் நகர்,சேதுபதி நகர், மருதுபதி நகர்,செட்டிகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.