தும்மலக்குண்டு ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2023 05:09
வடமதுரை: வடமதுரை தும்மலக்குண்டில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள், செல்வ விநாயகர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், நாகம்மாள், கருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.