அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; ஜனவரி 22ம் தேதி கோலாகலம்!.. பணிகள் மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2023 05:09
உத்தரபிரதேசம்; அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கோவிலின் முதல் தளத்தில் மும்முரமாக வேலை நடைபெற்று வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். இறுதி கட்ட வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது.