ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா : மது கலயம் ஏந்தி ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2023 10:09
மேலூார்: மேலூர், வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் பெண்கள் மதுக்கலயம் ஏந்தியும், வைக்கோல்பிரி சுற்றியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவையொட்டி 60 கிராமங்களை சேர்ந்த ஏழு பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் அம்மனாக செப்.12 தேர்வு செய்யப்பட்டு, வெள்ளலூரில் உள்ள கோயில் குடியிருப்பு வீட்டில் 15 நாட்கள் தங்கியிருந்தனர். இன்று கோயில் குடியிருப்பு வீட்டில் இருந்து எட்டு கி.மீ., துாரத்தில் கோவில்பட்டியில் உள்ள ஏழை காத்தம்மன் கோயிலுக்கு அம்பலகாரர்கள் தலைமையில் ஏழு குழந்தைகள் மாலை மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டனர். அதற்கு முன்பாக பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியில்லாமல் வாழ வேண்டியவர்கள் உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் கிடைக்க பெற்றவர்கள் ஏழைகாத்தம்மன் மற்றும் பதுமை சிலை ஏந்தியும், பூக்கொடைகளை சுமந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். நாளை (செப்.27) தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை (செப்.28) மஞ்சள் நீராட்டும், அக்.3 கோயில் முன் உள்ள குளத்தில் பெரிய மது கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.