ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் பட்டு சாற்றல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2023 10:09
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு சாற்றும் வைபவம் நேற்றிரவு நடந்தது.
திருப்பதி புரட்டாசி பிரமோற்ஸவம் ஐந்தாம் நாளன்று ஏழுமலையான் சாற்றிக் கொள்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் கொண்டு செல்வது வழக்கம். இதற்கு எதிர் சீராக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து ஆண்டாளுக்கு பட்டு கொடுத்து அனுப்புவார்கள். அதன்படி நடந்த செப்.20 அன்று திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர் சீராக ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆண்டாளுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சாற்றும் வைபவம் நேற்று இரவு 7:30 மணிக்கு ஆண்டாள் கோயிலில் நடந்தது. ஸ்தானிகம் ரமேஷ் வீட்டில் இருந்து கோயில் மரியாதையுடன் பட்டு, மங்கல பொருட்கள் கொண்டு வரப்பட்டது. வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகளை பத்ரி பட்டர் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் கோயில் அறங்காவலர்கள், பட்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.