திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்; கோவிந்தனை தரிசிக்க குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2023 10:09
திருப்பதி: திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிந்தனை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் 26ம் தேதி நிறைவு பெற்றது. பிரம்மோற்சவத்தை தொடர்ந்து, விடுமுறை தினம் மற்றும் புரட்டாசி தரிசனம் செய்ய வேண்டும் என திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று புரட்டாசி சனியை முன்னிட்டு ஏழுமலையானை தரிசிக்க கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், காத்திருப்பு மண்டபங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். காத்திருக்கும் வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் தரிசனத்திற்கு பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துவருகிறது.