காரைக்கால்: காரைக்கால் கோதண்டராமர் கோவிலில் புரட்டாசியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்ட நாதனாக கோதண்டராமன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடக்கும். அதன்படி நேற்று புரட்டாசி இரண்டாம் சனியையொட்டி மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது.இதுப்போல் கோவில்பத்து கோதண்டராமர் கோவிலில் புரட்டாசியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்ட நாதனாக கோதண்ட ராமன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதுபோல் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவில் மற்றும் பெருமாள். ஆஞ்சநேயர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் புரட்டாசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் வீடுகளில் புரட்டாசியை முன்னிட்டு பெருமாளுக்கு பலவகையான உணவுகள் தயார் செய்து படையல் போட்டு தளியல் நிகழ்ச்சி மேற்கொண்டனர்.