அகரம் முத்தாலம்மன் கோயில் முகூர்த்தக்கால் ஊன்றும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2023 05:09
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், வருகிற அக்.15 ல் சாமி சாட்டப்பட உள்ளது. அதன் பிறகு அக்.23 ஆம் தேதி, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி, திருவிழா நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து 24 ம் தேதி அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை நிர்வாக அலுவலர் மாரிமுத்து, தொழில் அதிபர் மேகநாதன், ஆசிரியர் செந்தில் முத்துக்குமார் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர். சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.