காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2023 10:10
காளஹஸ்தி : காளஹஸ்தி சிவன் கோயிலில் திங்கள்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வார இறுதியில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ராகு கேது பூஜைகளும் வரலாறு காணாத அளவில் நடைபெற்றது. கோயில் அதிகாரிகள், 500 ரூபாய், 750 ரூபாய் கட்டணத்தில் செய்யப்படும் ராகு கேது சர்ப்ப தோஷ பூஜைகள் செய்யும் மண்டபங்களை இரண்டு பிரிவாக பிரித்து இரண்டு மண்டபங்கள் அமைத்துள்ளனர். பக்தர்கள் மோதலை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகம், போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரிசைகள் ஏற்பாடு செய்தனர். கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் செல்லும் வரிசையின் அருகே நின்று பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டார்.புரட்டாசி மாதத்தில் வார விடுமுறையை யொட்டி திருமலை க்ஷேத்திரத்தில் ஏழுமலையான் தரிசனம் செய்த பக்தர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்யவும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் காலை முதல் மாலை வரை அலைமோதியது. கோயில் நிர்வாகம் பக்தர்கள் எந்த பிரச்சனையும் சிரமமும் இல்லாமல் விரைவாக தரிசனம் செய்யவும், குடிநீர் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ததோடு கடும் நெரிசலின் போதும் பக்தர்கள் மன அமைதியோடு சாமி தரிசனம் செய்ததாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.