மோதி துங்ரி கணேஷ் கோவிலில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2023 03:10
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மோதி துங்ரி கணேஷ் கோவிலில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, சுவாமி தரிசனம் செய்தார். ராஜஸ்தானில் நடைபெறும் பாஜகவின் மையக் குழு கூட்டத்திற்காக ஜேபி நட்டா ஜெய்ப்பூர் சென்றுள்ளார். அங்குள்ள மோதி துங்ரி கணேஷ் கோயிலுக்கு பாஜக தொண்டர்கள் சிலருடன் சென்ற அவர், சுவாமியின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு மற்றும் லட்டு பிரசாதம் அளிக்கப்பட்டது.