பதிவு செய்த நாள்
07
அக்
2023
05:10
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் எண்ணப்பட்டது.
அவிநாசியில், சுந்தரமூர்த்தி நாயனாரால்,பாடல் பெற்ற தலமாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இதில், நேற்று கோவில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் செந்தில்குமார், அவிநாசி கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன்,கோவில் சரக ஆய்வாளர் செல்வப் பிரியா, அறங்காவலர் பொன்னுச்சாமி, ரவி பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதில், சுற்றுக் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தி 527 ரூபாய், திருப்பணி உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சத்தி 62 ஆயிரத்தி 856 ரூபாய், கோசாலை உண்டியல் காணிக்கை ரூ.34 ஆயிரத்தி 578 ரூபாய், காசிக்கிணறு உண்டியல் காணிக்கை ரூ.2 லட்சத்தி 56 ஆயிரத்தி 761 ரூபாய் மற்றும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் நிரந்தர உண்டியல் காணிக்கை ரூ. 13 லட்சத்தி 2351 ரூபாய் இருந்தது. மேலும், தங்கமாக 53 கிராம்,வெள்ளி 101 கிராம் இருந்தது.