சைவத் திருமுறை பயிற்சி நிறைவு நெல்லையில் கயிலை பேரணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2023 01:10
பேட்டை: நெல்லை டவுனில் கயிலை பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். திருவாவடுதுறை ஆதீனத்தின் சைவத்திருமுறை நேர்முக பயிற்சி மையத்தின் 7ம் தொகுப்பு நடந்தது. இதன் நிறைவு விழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் முன்பிருந்து கயிலைப் பேரணி நடந்தது. பேரணிக்கு திருவாவடுதுறை 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர்சரவணன், கயிலைபேரணியைதுவக்கி வைத்தார். பேரணி நெல்லையப்பர் கோயில் 4 ரதவீதிகளிலும் வலம் வந்து நெல்லையப்பர் கோயில் முன்பாக நிறைவடைந்தது. பேரணியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை சேர்ந்த சிவ பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர். சைவத்திருமுறை பயிற்சியாளர்கள், பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பேட்டைமதிதா இந்துக்கல்லூரியில் சைவத்திருமுறை பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் மயிலாடுதுறை சிவகுமார்ஓதுவா மூர்த்தி குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது. திருமுறை இயக்குனர் சண்முகசுந்தரம் வரவேற்றார். ஆதீன புலவர்குஞ்சிதபாதம், திருமுறை சொற்பொழிவாற்றினார். நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் செல்லையா சிறப்புரையாற்றினார். பஞ்சபுராண திரட்டு நூலினை நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் சொனா வெங்கடாச்சலம் அறிமுகம் செய்து பேசினார். அமைப்பாளர் கணேசன் நன்றி கூறினார்.