புரட்டாசி அமாவாசையை (அக்.14, 2023) மகாளய அமாவாசை என்றும், அதற்கு முந்திய 15 நாட்களை (செப்.1 – அக்.14) மகாளய பட்சம் என்பர். இந்நாட்களில் பிதுர்லோகத்தில் வாழும் முன்னோர்கள் ஆசியளிக்க பூமிக்கு வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிதுர்கடன் என்னும் தர்ப்பணம் செய்வது கடமை. பெற்றோருக்கு மகனாக பிறந்தால் மட்டும் புத்திரனாக முடியாது. பின்வரும் கடமைகளைச் செய்பவரே அத்தகுதியை பெற முடியும். * வாழும் காலத்தில் பெற்றோரிடம் அன்புடன் நடத்துதல். * அவர்கள் மறைந்த பின் பிதுர்கடன்கள் செய்தல். * வாழ்வில் ஒருமுறையாவது விஷ்ணுகயாவில்(உத்தர்கண்ட்) சிராத்தம் கொடுத்தல்.