பதிவு செய்த நாள்
15
அக்
2023
09:10
புதுடில்லி: பிரதமர் மோடி அலுவலகத்தில் முதன்மை செயலராக பணியாற்றியவர் நிருபேந்திர மிஸ்ரா. இப்போது இவர், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிக் குழு தலைவராக உள்ளார்.
தமிழகத்தில் உள்ள சைவ, வைணவ மடாதிபதிகள், ஆதீனங்கள் ஆகியோருக்கு ராமர் கோவில் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழக ஆதீனங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட மடாதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ஜன., 15 முதல் 24 வரை அயோத்தி ராமர் கோவிலில் பல யாகங்கள் நடைபெற உள்ளன. இதில், நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, அன்பாக தன் கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளாராம். மேலும், நவம்பர் மாத இறுதியில், நிருபேந்திர மிஸ்ரா தமிழகம் வர இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது, தமிழக மடாதி பதிகள் மற்றும் ஆதீன தலைவர்களை நேரடியாக சந்தித்தும் அழைக்க இருக்கிறாராம். இதைத் தவிர, ஆர்.எஸ்.எஸ்., - வி.எச்.பி., அமைப்புகளும், தமிழக மடாதிபதிகள், ஆதீன தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.