வேகமெடுக்கும் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகள்; பிரமாண்ட மேல் தோற்றம் வெளியீடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2023 11:10
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், அடுத்தாண்டு ஜனவரியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரியில், கோவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன. 2024 ஜனவரி 15 முதல் 24 வரை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இதனால், அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் கட்டுமானத்தை ஜனவரிக்குள் முடிப்பதற்காக இரவு பகலாக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பிரமாண்ட மேல் தோற்ற படம் வெளியிடப்பட்டுள்ளது.