நவராத்திரி விழா : ராமேஸ்வரம் கோயிலில் ஸ்ரீசக்கர சுவாமிக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2023 06:10
ராமேஸ்வரம்: நவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்ரீசக்கர சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அக்.,14ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டி நவராத்திரி விழா துவங்கியது. 2ம் நாளான இன்று அம்மன் சன்னதி அருகில் கோயில் குருக்கள் உதயகுமார், ஸ்ரீசக்கர சுவாமிக்கு பால், தேன், பன்னீரில் அபிஷேகம் செய்து பூஜை செய்து மகா தீபாரதனை நடத்தினார். அப்போது கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அம்மன் சன்னதி அருகில் பர்வதவர்த்தினி அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார். பின் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.