காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வரபகவான் கோவிலில் நவராத்திரி கொலு துவக்கியது.
காரைக்கால் திருநள்ளாறு உலக புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரண்யோஸ்வர் கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிர மூர்த்தியாக சனிஸ்வரபகாவன் அருள்பலித்து வருகிறார். ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் நவராத்திரி துவக்கவிழா நேற்று முன்தினம் துவக்கியது.இதில் அம்பாள் பிரணாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீபிரணாம்பிகை தாயாருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையும்,மகா தீபாராதனையும் நடைபெற்றது.இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.