காளஹஸ்தியில் நவராத்திரி விழா; அர்த்தநாரீஸ்வர அலங்கரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2023 10:10
திருப்பதி ; காளஹஸ்தி நகரில் கனகாசல மலை மீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மன், மீனாட்சி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கோவில் அர்ச்சகர்கள் மீனாட்சி தேவி அலங்காரத்தில் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி தேவியாக கனகதுர்கை அம்மனை தரிசனம் செய்தனர். நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான இன்று ஞான பிரசுனாம்பா சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் பிரம்மசாரிணி தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயிலில் மட்டுமின்றி, முத்யாலம்மன் கோயிலில் அம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதே போல் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் தரிசனம் செய்தனர்.