அமிர்தசரஸ் பொற்கோவிலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2023 05:10
அமிர்தசரஸ்: அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தரிசனம் இன்று தரிசனம் செய்தார்.
பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வருவது பொற்கோவில் தான். பழமை, புதுமை இணைந்த இக்கோயில் காண்போரை கவரும் விதத்தில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. சீக்கியர்களின் புனிதமான இக்கோயில், குருநானக் 1502 ல் இன்ர்ஹ் மண்ணில் பாதம் பதித்த இடத்தில் கட்டப்பட்டது. சிறப்பு மிக்க இங்கு இன்று காலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பொற்கோயில் என்று அன்புடன் அழைக்கப்படும் ஹர்மந்திர் சாஹிப்பிற்கு வருகை தந்தார். பக்தி மற்றும் ஒற்றுமையின் சின்னமான இங்கு சிறப்பு வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.