பதிவு செய்த நாள்
20
அக்
2023
03:10
திருவொற்றியூர், திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில், புரட்டாசி நவராத்திரி திருவிழா, 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவ அம்மன், பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வருகிறார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, நான்காம் நாளில், கவுரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதேபோல், அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் உற்சவ தாயார், பத்மாவதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.