காவனக்கோட்டை வழுதநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2023 05:10
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனக்கோட்டை வழுதநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகர் மற்றும் விக்னேஸ்வரர் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கோ பூஜை மற்றும் பூர்ணாகுதி பூஜைகள் நடைபெற்றன. பின்பு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை காவனக்கோட்டை கிராமத்தினர் மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்கள் செய்திருந்தனர்.