நாளை அழகர்கோவில் கள்ளழகருக்கு தொட்டி திருமஞ்சனம்; வேறு எந்த கோயில்களிலும் நடைபெறாத சிறப்பு!;
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2023 01:10
அழகர்கோவில்: வைணவ ஆச்சாரியர்களில் முதன்மையானவரும் ராமானுஜருக்கு ஆசிரியராக இருந்தவரும் ஆண்டார். இவரை குருவாக கள்ளழகர் ஏற்றுக்கொண்டது வரலாறு. கள்ளழகரையே ஆண்டவர் என்ற பெருமை படைத்தவர். இவருக்கு கள்ளழகர் கோயிலில் தனிசன்னதி உள்ளது. இவர் ஐப்பசி மாதம் 12 ம் நாள் இறந்ததால் குருவுக்கு செய்யும் மரியாதையாக கள்ளழகர் தைலக்காப்பு உற்சவம் நடக்கிறது. கள்ளழகர் தேவியர் இன்றி தனித்துச்சென்று நீராடுவதும், நுாபுர கங்கைஅருவியின் கீழ் உடுத்திய உடைகளுடனும், அணிந்த ஆபரணங்களுடனும் நின்றே நீராடுவதும் சிறப்பு. இதற்கு தலையருவி உற்சவம், எண்ணைக்காப்பு உற்சவம், தொட்டி திருமஞ்சன உற்சவம் என பல பெயர்கள் உண்டு. இது வேறு எந்த வைணவ கோயில்களிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உற்சவர் நீராடும் தண்ணீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்படும். நாளை( 26ம் தேதி) காலை11 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.