திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் விஜயதசமி பரிவேட்டை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2023 01:10
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு பாரிவேட்டை நடந்தது.
நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு ராமையன்பட்டிக்கு எழுந்தருளல் நடக்கும். நேற்று மாலை கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர் பரிவேட்டைக்கு எழுந்தருளினார். சுவாமியுடன் புட்டாரத்தியம்மனும் புறப்பட்டார். புட்டாரத்தியம்மனை பாறையடி பகுதியில் நிறுத்தி விட்டு சுவாமி ராமையன்பட்டிக்கு சென்றார். அங்கு அம்பு விட்டு பரிவேட்டை நிறைவு பெற்றதும் சுவாமியும், புட்டாரத்தியம்மனும் கோயிலுக்கு திரும்பினர். பரிவேட்டை நிகழ்வைக்காண சுற்றுப்பகுதியினர் திரண்டு வந்தனர். * பாளைஅழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் சுவாமி விஜயதசமி பரிவேட்டைக்கு வி.எம்.சத்திரம் ரோட்டிற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜை நடந்தது. அம்பு விட்ட பின்பு சுவாமி கோயிலுக்கு திரும்பினார். ஏராளமானோர் வழிபட்டனர்.