திருச்சி; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் டிசம்பர் 12ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா துவங்க உள்ளதை முன்னிட்டு, ஆயிரங்கால் மண்டபம் அருகே, முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுந்தம் என அழைக்கப்படுகின்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வருகிற டிசம்பர் 12ம் தேதி முதல் 02.01.2024 முடிய வைகுந்த ஏகாதசி பெருவிழா நடைபெறவிருக்கிறது. இச்சிறப்புமிகு திருநாள் திருமொழி, திருவாய்மொழி, இயற்பா என்று 22 நாட்கள் நடைபெறும். இதற்காக இன்று ஆயிரங்கால் மண்டபம் அருகே, முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான வைகுந்த ஏகாதசி (பரமபதவாசல் திறப்பு) 23.12.2023அதிகாலை 04.00 மணிக்கு நடைபெறுகிறது. கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.