பதிவு செய்த நாள்
26
அக்
2023
05:10
சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பணத்தை எடுத்து, சென்னையில் கலாசார மையம் கட்டும் முயற்சியில், ஹிந்து சமய அறநிலையத் துறை இறங்கியுள்ளது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு பல்வேறு இனங்கள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தில், 25 சதவீத தொகையை, கோவிலுக்கான மூலதன நிதியில் சேர்க்க வேண்டும். அதில், எக்காரணம் கொண்டும் கைவைக்கக் கூடாது. உபரி நிதியில் இருந்து வேண்டுமானால், சில குறிப்பிட்ட இனங்களுக்கு செலவு செய்யலாம். மூலதன நிதிக்கு போக, மீதி உள்ள தொகையை, அர்ச்சகர், பணியாளர் பயிற்சி, பக்தர்களுக்கான அடிப்படை வசதி செய்து கொடுப்பது உள்ளிட்ட சில விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும். என ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் கூறினார்.
பா.ஜ., தலைவர் அண்ணாமலை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து, கோவில் நிலத்தில் கலாசார மையம் அமைக்கும் முறைகேட்டை தி.மு.க., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறினார்.
இது குறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; கலாசார மையம் முழுவதும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக உருவாக்கப்படுகிறது. கோவில் அறங்காவலர்கள் ஒப்புதல் பெற்றே நிதி பயன்படுத்தப்படுகிறது. திருக்கோவில் நிதியை பக்தர்களின் வசதிக்காக செலவிடுவது குற்றமாகாது என்றார்.